Thursday, October 8, 2009

Inglourious Basterds [2009] - அமெரிக்கர்கள் புனிதர்கள்..


IMDB Rating : 8.6/10
.

இரண்டாம் உலகப் போரில் எல்லா நாடுகளுக்கும் ராணுவ ஆயுதங்களை விற்று பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்ட, மேலும் போர் முடியும் நேரத்திலும், அவசர அவசரமாக, ஐன்ஸ்டீனின் அணுகுண்டை, ஹிரோஷிமா நாகசாகியில் பரிட்சித்து, கொஞ்சமும், ஜெர்மன் (ஹிட்லர்) யூதர்களை கொன்றதற்கு சளைக்காமல் ஏராளாமான மக்களை கொன்ற, வியட்நாமில் உலகத்தின் அதிகமான குண்டுகள் விழுந்த பகுதியாக மாற்றிய அமெரிக்கா, மிகவும் புனிதர்கள். அமைதியை உலகெங்கும் நிறுபுபவர்கள்.
.
போரை தளமாக கொண்ட அமெரிக்க படங்கள் Mostly எனக்கு பிடிப்பதே இல்லை. அவர்கள் அப்படத்தில் அவர்களை காட்டிகொள்ளும்த்தனம் தான் காரணம்.ஹிட்லரும் நாசிக்களும் மிக மிக கெட்டவர்கள் என்று காட்டுவதன் மூலம் வியட்நாம், கியூபா, தென் அமெரிக்கா, ஈராக், ஆப்கன் அழிவுகளை மறைக்கும் தனம். இதன் மூலம் தங்களை நல்லவர்கள் என கட்டிக்கொள்ளும் நுண்ணரசியல். இந்த படத்தில் நமக்கு பிடித்தமான இயக்குனர் Quentin-னும் அதையே செய்கிறார். இந்த படத்தை தன்னுடைய Master Piece என்றும் சொல்லிக்கொள்கிறார்.
.
இதுவரை Quentin-னின் Reservior Dogs, Pulp Fiction, Kill Bill Vol-1, Kill Bill Vol-2, Sincity மற்றும் Deathproof படங்களை பார்த்திருப்பதால், நிச்சயம் இந்த படம் Quentin-ன் Master Piece இல்லைதான் என்றாலும் படத்தின் அரசியலை ஒதுக்கிவிட்டு பார்த்தால் Quentin-னின் trademark making தான். Reservior Dogs, Pulp Fiction போல் அல்லாமல் கிட்டத்தட்ட நேர்க்கோட்டு படம் இந்த Inglourious Basterds.
.
இந்த படத்தின் கதை Quentin-னின் புனைவுதான். படம் ஆரம்பிக்கும் போதே சொல்லப்படும் வாசகம் "Once upon a time, in Nazi occupied France.. 1941".. படத்தின் முதல் காட்சியே (Chapter One), ஒரு ஜெர்மானிய அதிகாரி, யூதர்களை தன வீட்டின் அடியில் ஒளித்து வைத்திருக்கும், ஒரு பிரெஞ்சு குடியானவனின் வீட்டில், அவனோடு பேச துவங்குவதோடு துவங்குகிறது. வழக்கம் போல் Quentin style நீண்ட உரையாடல். அதகளம். அங்கிருந்து ஒரு யூத பெண் மட்டும் தப்பிக்கிறாள். பின்புதான் Inglourious Basterds கதையில் வருகிறார்கள். இவர்களின் தலைவன் Brad Pitt. வித்தியாசமான accent-இல் பேசி கலக்குகிறார். இவர்களின் குழுவின் திட்டம், ஒவ்வொரு குழு வீரனும் நூறு நாஜிக்களின் கபாலத்தை கொய்வது. செய்கிறார்கள். பின்பு நான்கு வருடங்கள் கழித்து கதை துவங்குகிறது. ஒரு ஜெர்மானிய போர்வீரனின் போர் சாகசங்கள் படமாக எடுக்கப்படுகிறது. அப்படத்தை பார்க்க ஹிட்லர் வருகிறார். இப்போது அந்த யூத பெண், ஒரு தியேட்டரை நிர்வகிக்கிறார், அங்கு இந்த திரைப்படம் திரையிடும் போது, நாஜிக்களை பழிவாங்க அப்பெண்ணும், Inglourious Basterds-ம் திட்டமிட, படம் தியேட்டருக்குள் மற்றும் வெளியே என மாறி மாறி கதை சுழல்கிறது.
.
பிரான்சில் நடைபெறும் கதை என்பதால், படத்தின் நிறைய இடங்களில் ஆங்கிலம் இல்லை. subtitle மட்டும்தான். மேலும் ஒவ்வொருவரின் accent-ம் வித்தியாசம். யூதர்களை எலியாக கருதும், அமெரிக்காவுக்கு வந்த நீக்ரோக்களை கிங்காங்குடன் ஒப்பிடும், ஜெர்மானிய அதிகாரிகள் என அவர்களின் வன்முறையை வசனங்களில் தோலுரிக்கிறார். படத்தின் ஒளிப்பதிவும், நீண்ட உரையாடல்களும், பின்னணி இசையும், அதீதமான வன்முறையுமென typical Quentin-னின் திரைப்படம். படத்தின் கடைசி காட்சியில் Brad Pitt திரையைப்பார்த்து "This is my Master Piece" என்பதோடு முடிகிறது.
.
Inglourious Basterds - Another Quentin Movie..
.


IMDB LINK

My Rating : ****

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க..
08.10.2009

7 Comments:

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

jackiesekar said...

நன்றாக எழுதி இருக்கிக்னறீர்கள்..அமெரிக்கர் யோக்கியதையையும் சாடி இருப்பது நன்று

Saravana Kumar MSK said...

@தமிழினி : நன்றிங்க..

@jackiesekar : நன்றிங்க்னா..

RaGhaV said...

உங்கள மாதிரி நானும் நிறைய படங்கள் பார்பேன்.. குறிப்பா ஹாலிவுட்.. அதுவும் உங்களுடைய விமர்சனங்கள் ரொம்ப நல்ல இருக்கு.. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. :-)))
உங்களால நான் நிறைய நல்ல படங்கள் பார்த்திருக்கேன்..
நன்றி சரவணா..
இன்னும் நிறைய பார்ப்பேன்னு நினைக்கிறேன்..
நிறைய எழுதுங்கள்.. :-)

Saravana Kumar MSK said...

@RaGhaV : நன்றி ராகவ். நீங்கள் பார்க்கும் படங்களை பற்றி பின்னூட்டங்களில் தெரிவித்தால், நானும் அப்படங்களை பார்ப்பேன். :)

kanagu said...

விமர்சனம் நல்லா இருக்குங்க.. ஆனா இங்க சென்னைல இந்த படமெல்லாம் ரிலீஸே ஆக மாட்டேங்குது... :(

Saravana Kumar MSK said...

@kanagu : ஆமாங்க. எனக்கும் அதில் வருத்தமுண்டு. :(

Post a Comment

மறக்காம உங்க கருத்துக்களை எழுதுங்க.. தமிழ்மணம், தமிழிஷ் ஓட்டு போடுங்க.. :)

Disclaimer

The images in this site are mostly not mine, copyright is to all the respective websites and will be removed in case of threat or by request.

  ©Template by Dicas Blogger.

TOPO